Paristamil Navigation Paristamil advert login

105 வயதில் முதுகலை பட்டம் பெற்ற மூதாட்டி

105 வயதில் முதுகலை பட்டம் பெற்ற மூதாட்டி

24 ஆனி 2024 திங்கள் 09:56 | பார்வைகள் : 812


சாதனைகளை நிகழ்த்துவதற்கும் பிடித்த விஷயங்களை செய்வதற்கும் வயது ஒரு தடையில்லை என்பதற்கு உலகம் முழுவதும் பல்வேறு உதாரணங்கள் உள்ளன.

சமீபத்தில் உலகின் வயதான ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை அமெரிக்கவைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஒருவர் பெற்றார். 

இந்நிலையில் தனது 105 வது அகவையில் உள்ள மூதாட்டி ஒருவர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் வாங்கியுள்ளது அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது.

அமேரிக்காவில் ஸ்டேன்போர்ட் பலக்லைக்கழகத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் 105 வயதாகும் கின்னி ஹிஸ்லோப் என்னும் அந்த மூதாட்டி மிடுக்காக நடந்து வந்து தனது முதுகலைப் பட்டதை வாங்கிக்கொண்டார். 

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் 1940 ஆம் ஆண்டு கின்னி தனது இளங்கலைப் பட்டத்தை ஸ்டேன்போர்டில் பெற்றார். அதைத்தொடர்ந்து தனது முதுகலைப் படிப்பை பயிலத்தொடங்கிய கின்னி ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.

ஆனால் அந்த சமயத்தில் கின்னியின் காதலன் ஜார்ஜ் இரண்டாம் உலகப்போரில் பணியாற்ற செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் கின்னியின் படிப்பு பாதியில் தடைபட்டது. எனவே தற்போது 83 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனது ஆய்வை வெற்றிகரமாக முடித்த கின்னிக்கு முதுகலைப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பட்டத்தை வாங்கிக்கொண்ட கின்னி இதுகுறித்து பேசுகையில், அடக் கடவுளே , இதற்காக நான் வெகு காலமாக காத்திருந்தேன். முயற்சி செய்தால் எல்லோரும் மேல் படிப்பில் வெற்றி பெறலாம் என்று தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்