இசை நிகழ்ச்சியின் நடுவே மேடையில் இருந்து தவறி விழுந்த பாடகர் Gilbert Montagné..!

24 ஆனி 2024 திங்கள் 11:50 | பார்வைகள் : 13265
பிரான்சின் பிரபல பொப் இசை பாடகர் Gilbert Montagné, இசை நிகழ்ச்சியின் போது மேடையில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
நேற்று ஜூன் 23, ஞாயிற்றுக்கிழமை இரவு குறித்த இசை நிகழ்ச்சி Saint-Pathus (Seine-et-Marne) நகரில் இடம்பெற்றது. பாடல் பாடிக்கொண்டு நடனமாட முற்பட்ட வேளையில், கால் தடுக்கி மேடையின் பின்புறம் தலைகீழாக விழுந்தார். 72 வயதுடைய அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. உடனடியாகவே அவர் மருத்துவ உதவியாளர்களாக கண்காணிக்கப்பட்டார்.
இச்சம்பவத்தை அடுத்து இசை நிகழ்ச்சி சிறிது நேரம் தடைப்பட்டது.
இச்சம்பவத்துக்கு ஒரு நாள் முன்பாக Fête de la Musique இசைத்திருவிழாவில் எலிசே மாளிகையில் ஜனாதிபதிக்கு முன்பாக பாடியிருந்தார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025