யாழில் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்த பக்தர் திடீர் மரணம்

29 ஆவணி 2023 செவ்வாய் 02:28 | பார்வைகள் : 10264
யாழ்.தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் அங்கப் பிரதிஷ்டை செய்த அடியவர் திடீரென சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னையா சுரேஷ்குமார் என்ற 57 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புக்கான காரணம் உடற்கூற்று பரிசோதனைக்கு பிறகே தெரியவரும்.
சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025