Hauts-de-Seine : கட்டுப்பாட்டை மீறி பயணித்த ஸ்கூட்டர் விபத்தில் சிக்கியது... இளைஞன் படுகாயம்..!

24 ஆனி 2024 திங்கள் 13:41 | பார்வைகள் : 9769
காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக பயணித்த ஸ்கூட்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. 23 வயதுடைய இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Asnières-sur-Seine (Hauts-de-Seine) நகரில் இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. காலை 6 மணி அளவில் இளைஞன் ஒருவர் Yamaha TMax ரக ஸ்கூட்டர் ஒன்றில் வேகமாக பயணித்துள்ளார். Avenue des Grésillons பகுதியில் அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் ஸ்கூட்டர் நிற்காமல் பயணித்துள்ளது.
அதையடுத்து காவல்துறையினர் அவரை துரத்திச் சென்றனர்.
அதிவேகமாக பயணித்த குறித்த நபர், தொடருந்து கடவை ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த தடையில் மோதி விபத்துக்குள்ளானார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவருக்கு SAMU மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
சம்பவம் தொடர்பில் இரு வேறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025