இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்ட மாற்றம்
24 ஆனி 2024 திங்கள் 14:14 | பார்வைகள் : 1664
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் தரவுகளின் அடிப்படையில், இலங்கையின் பணவீக்கம் ஏப்ரல் 2024 இல் 2.7% காணப்பட்டதுடன், அது மே 2024 இல் 1.6% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
உணவு வகையின் பணவீக்கம் ஏப்ரல் 2024 இல் 3.3% ஆக இருந்த நிலையில் அது மே 2024 இல் 0.5% ஆகக் குறைந்துள்ளது.
இதேவேளை, 2024 ஏப்ரலில் 2.3% ஆக பதிவாகியிருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் 2024 மே மாதத்தில் 2.4% ஆக சிறிதளவு அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.