Paristamil Navigation Paristamil advert login

காதலரை கரம் பிடித்தார் நடிகை சோனாக்சி…

காதலரை கரம் பிடித்தார் நடிகை சோனாக்சி…

24 ஆனி 2024 திங்கள் 15:00 | பார்வைகள் : 250


பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் பிரபல அரசியல் தலைவர் சத்ருகன் சின்ஹாவின் மகள் ஆவார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான தபாங் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற சோனாக்சிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வந்தன. ஷாகித் கபூர், அர்ஜூன் கபூர், சல்மான் கான், ஆதித்யா ராய் கபூர் உள்பட பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

தமிழில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் அவர் கோலிவுட் திரையுலகிற்கும் அறிமுகமானார்.லிங்கா படத்திற்கு பிறகு அவர் தமிழில் திரைப்படம் ஏதும் நடிக்கவில்லை. இறுதியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய ஹீராமண்டி வெப் தொடரில் இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்தொடரில் சோனாக்சியின் நடிப்பு பாராட்டப்பட்டது.

இதனிடையே, நடிகை சோனாக்சி சின்ஹாவும், பிரபல நடிகர் ஜாகிர் இக்பாலும் காதலிப்பதாக அண்மைக் காலமாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால், இருவரும் இதற்கு மறுப்பு தெரிவித்து தாங்கள் நண்பர்கள் தான் என்று விளக்கமும் அளித்தனர். இந்நிலையில், நடிகை சோனாக்சியும், ஜாகிரும் எளிமையான முறையில் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், பாலிவுட் நட்சத்திரங்கள் சல்மான்கான் முதல் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்