€300,000 யூரோக்கள் மோசடி.. பொது நிதிய அதிகாரி கைது..!
25 ஆனி 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 4799
VAT வரியில் €300,000 யூரோக்கள் வரை மோசடியில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய ஊழல் மற்றும் நிதி மோசடி போன்றவற்றை கண்காணிக்கும் அலுவலகம் கடந்த ஆறுமாதங்களாக மேற்கொண்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளது. Hauts-de-Seine மாவட்டத்தைச் சேர்ந்த பொது நிதிக்காக அலுவலகம் (Direction des finances publique) இல் பணிபுரியும் அதிகாரி ஒருவர், பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து €330,000 யூரோக்கள் பணத்தை VAT வரியில் இருந்து கழித்து அந்நிறுவனங்களுக்கே திருப்பி வழங்கியுள்ளார்.
பின்னர், வழங்கப்பட்ட தொகையில் இருந்து ஒரு பகுதியை இவர் பெற்றுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவரது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சந்தேகத்தித்து வழங்கிய தகவல்களை அடுத்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே இந்த மோசடி தெரியவந்துள்ளது.
குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.