அவதானம் ஒலிம்பிக் மோசடிகள் அதிகரித்து உள்ளது. நன்கு ஆராய்ந்து முடிவெடுங்கள். காவல்துறையினர்.
25 ஆனி 2024 செவ்வாய் 08:36 | பார்வைகள் : 3777
ஒலிம்பிக் போட்டிகள் நெருங்கி வரும் நிலையில் பல்வேறுபட்ட இணைய தளம் மோசடிகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளின் விளையாட்டுகளை பார்ப்பதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை, மறுவிற்பனை, மலிவு விற்பனை என பல்வேறுபட்ட மோசடிகள் இணையதளம் மூலமாக நடைபெறுகிறது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான போலி விற்பனை இணையத்தளங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் இன்றுவரை 338 தளங்கள் கண்டுபிடிக்க பட்டு முடக்கப்பட்டுள்ளது எனவும், காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். போலி இணையதளங்கள் பெரும்பாலும் வேறு நாடுகளிலே பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அவற்றினை கண்டுபிடித்து முடக்குவது என்பது பெரும் சிக்கலான, நீண்ட பணி எனவும் எனவே பொதுமக்களே அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகளுக்கான சரியான நுழைவு சீட்டுகளை பெறுவதற்கு ஒலிம்பிக் போட்டிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளமான 'tickets.paris2024.org' இணையத்தளத்தை மட்டுமே பயன்படுத்துமாறு காவல்துறையினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.