Paristamil Navigation Paristamil advert login

பிரான்ஸ் பிரஜா உரிமை கடுமையாக்கப்படும், உயர் பதவிகள் பிரான்ஸ் நாட்டவர்களுக்கு மட்டுமே. தீவிர வலதுசாரிகள்.

பிரான்ஸ் பிரஜா உரிமை கடுமையாக்கப்படும், உயர் பதவிகள் பிரான்ஸ் நாட்டவர்களுக்கு மட்டுமே. தீவிர வலதுசாரிகள்.

25 ஆனி 2024 செவ்வாய் 08:37 | பார்வைகள் : 5207


பிரான்சில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள், தங்களுடைய நிலைப்பாடுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வரிசையில் நேற்றைய தினம் தீவிர வலதுசாரிகள் கட்சியின் தலைவர் Jordan Bardella தங்களின் நிலைப்பாடு குறித்து தெரிவித்துள்ளார். 

தேர்தலுக்கு முன்னரான கருத்துக்கணிப்புகளின் படி நாடாளுமன்றத்தின் அதிக ஆசனங்களை பெறுவார்கள் என    கணிக்கப்பட்டுள்ள தீவிர வலதுசாரி கட்சியான RN கட்சியின் தலைவர் தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் எடுக்க இருக்கும் பல திட்டங்களை நேற்று அறிவித்துள்ளார். அதில் பெரும்பான்மையான திட்டங்கள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

அதில் எற்கனவே RN கட்சியின் அரசுத்தலைவர் வேட்பாளர் Marine Le Pen அவர்கள் முன்மொழிந்து பின்னர் கைவிடப்பட்ட இரு திட்டங்கள் Jordan Bardella அவர்களால் மீண்டும் தூசி தட்டி  எடுத்துவரப்பட்டுள்ளது என விமர்சனங்கள் கடுமையாக தெரிவிக்கின்றன. 

பிரான்சில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகள் 'கட்டாயமான பிரான்ஸ் பிரஜா உரிமை' என்னும் நிலையை ரத்து செய்து, அவர் தங்களின் 18வது வயதின் பின்னர் அவர்கள் பிரஜா உரிமை கேட்கவேண்டும்,  அதற்கு அவர்கள் தகுதியாவதற்கு ஐந்து ஆண்டுகள் பிரான்ஸ் பாடசாலையில் பயின்ரிருக்க வேண்டும், குற்றச் செயல்களில் ஈடுபட்டும் இருக்க கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் "எவராக இருந்தால் அவர் 'binationaux' இரட்டை குடியுரிமை கொண்டவராக இருந்தால் அவருக்கு அரசின் மிகவும் மூலோபாய பதவிகள் (உயர் பதவிகள்) வழங்கப்படமாட்டாது. மூலோபாய வேலைகளை (உயர் பதவிகள்) நாங்கள் பிரத்தியேகமாக பிரெஞ்சு குடிமக்களுக்கு மட்டுமே ஒதுக்க விரும்புகிறோம்." எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்