பாரிஸ் l'hôtel de ville பகுதியில் பாரிய தீவிபத்து ஐந்து தீயணைப்பு வீரர்கள் படுகாயம், ஒருவரை காணவில்லை.
 
                    25 ஆனி 2024 செவ்வாய் 10:41 | பார்வைகள் : 10408
பரிசின் நகர சபையின் பிரதான பகுதியான 'l'hôtel de ville de Paris' பகுதியில் rue de la Verrerie வீதியில் உள்ள கட்டிடத்தில் இன்று காலை 8:45 மணியளவில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் பத்திற்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க போராடினார்கள் இதில் ஐந்து தீயணைப்பு வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதனால் பாரிசின் புகழ் பெற்ற BHV ( bazar hôtel de ville) முழுதாக மூடப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர் இந்த தீவிபத்தில் ஒருவரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியை போக்குவரத்துக்கும், பாவனைக்கும், வெளியோர் தவிர்க்குமாறு வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.
எரிந்த கட்டிடத்தின் மூன்றாவது, நான்காவது மாடிகளின் படிக்கட்டுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு வசித்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு மற்றும் ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
        சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan