ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து உண்மைதானா?

25 ஆனி 2024 செவ்வாய் 15:21 | பார்வைகள் : 6436
ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி ஆகிய இருவரும் கருத்து வேறுபாடுடன் இருப்பதாகவும் இருவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்வதாகவும் விரைவில் விவாகரத்து செய்ய போவதாகவும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த செய்திகளுக்கு ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் எந்த விளக்கமும் கொடுக்காததை அடுத்து இந்த செய்தி உண்மையாக இருக்குமோ என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை எல்லாம் டெலிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி குறித்த விவாகரத்து வதந்தி உண்மையாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தியை திருமணம் செய்தார் என்பதும் இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பதும் இவர்களில் ஆரவ் என்பவர் ஜெயம் ரவி நடித்த ’டிக் டிக் டிக்’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த சில ஆண்டுகளில் தனுஷ் - ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் - சைந்தவி , இமான் - மோனிகா உட்பட சில திரையுலக பிரபலங்கள் விவாகரத்து குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1