Paristamil Navigation Paristamil advert login

இல் து பிரான்சுக்குள் மாசடைவு எச்சரிக்கை..!

இல் து பிரான்சுக்குள் மாசடைவு எச்சரிக்கை..!

25 ஆனி 2024 செவ்வாய் 15:32 | பார்வைகள் : 4948


நாளை ஜூன் 26, புதன்கிழமை இல் து பிரான்சுக்குள் சூழல் மாசடைவு ஏற்படும் எனவும், அது தொடர்பாக மக்கள் விளிப்புடன் இருக்கும்படியும் கோரப்பட்டுள்ளது.



வளிமண்டலத்தில் பலத்த மாசு துகள்கள் பரவியிருக்கும் எனவும், எளிதில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகுபவர்கள், சுவாச பிரச்சனை உள்ளவர்கள் முடிந்தவரை வெளியில் செல்வதை தவிக்கும் படியும், வெளியில் நடை பயிற்சி, உடற்பயிற்சி செய்வதை தவிக்கும் படியும் கோரப்பட்டுள்ளது.

பரிஸ், Hauts-de-Seine, Val-de-Marne, Seine-Saint-Denis, Yvelines, Essonne மற்றும் Val-d' Oise மாவட்டத்தின் ஒரு பகுதி, அத்துடன் Seine-et-Marne மாவட்டத்துக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையை, வளிமண்டலம் தொடர்பான கண்காணிப்புக்களை மேற்கொள்ளும் Airparif நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்