Paristamil Navigation Paristamil advert login

அர்ஜுன் தாஸ் ஜோடியாக நடிக்கின்றாரா அதிதி ஷங்கர்?

அர்ஜுன் தாஸ் ஜோடியாக நடிக்கின்றாரா அதிதி ஷங்கர்?

25 ஆனி 2024 செவ்வாய் 15:33 | பார்வைகள் : 3898


இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடித்த ’விருமன்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகம் ஆகி அதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ படத்தில் நாயகியாக நடித்தார். அவர் நடித்த இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நாயகி ஆக நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்ததாக தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி தற்போது ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் அர்ஜுன் தாஸ் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரி என்றும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்கு ’ஹிருதயம்’ என்ற மலையாள படத்திற்கு இசையமைத்த ஹிஷாம் என்பவர் தான் இசையமைக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்த ’அநீதி’ உட்பட சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அதிதியுடன் அவர் நடிக்கும் படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்