Paristamil Navigation Paristamil advert login

இறுக்கமானது தேர்தல் களம் RN 30.5%, NFP 30%. சில நிமிடங்களில் தொலைக்காட்சி விவாதம்.

இறுக்கமானது தேர்தல் களம் RN 30.5%, NFP 30%. சில நிமிடங்களில் தொலைக்காட்சி விவாதம்.

25 ஆனி 2024 செவ்வாய் 18:33 | பார்வைகள் : 3743


எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதலாவது சுற்றையும்( 30/6) அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது (07/07) சுற்றையும்  நாடாளுமன்றத்துக்கான தேர்தல் சந்திக்க இருக்கும் நிலையில், கடைசியாக வெளியான கருத்துக்கணிப்புகள் தேர்தல் களத்தை இறுக்கமாக்கி இருக்கிறது. தீவிர வலதுசாரி RN 30.5% சதவீத வாக்குக்ள்களையும், இடதுசாரி கட்சிகளின் கூட்டணியான NFP 30% சதவீத வாக்குக்ள்களையும் பெறுவார்கள் என கடைசியாக வெளியான கருத்துக்கணிப்பு தெரிவித்திருக்கும் நிலையில், தொலைக்காட்சி விவாதம் இன்று இன்னும் சில நிமிடங்களில் (21:00) நடைபெற உள்ளது.

பிரான்சின் பிரதான தொலைக்காட்சி சேவையான TF1 தொலைக்காட்சி சேவையில் நடைபெறவுள்ள நேரடி விவாதத்தில் Rassemblent National கட்சியின் சார்பில் Jordan Bardella அவர்களும், Nouveau Front Populaire கட்சியின் சார்பில் Manuel Bompard அவர்களும், ஆழும் கட்சியான Majorité Présidentielle சார்பில் பிரதமர் Gabriel Attal அவர்களும் பங்கெடுக்க உள்ளனர், இதில் நான்காம் தரப்பு கட்சியான Les Républicains கட்சியின் சார்பில் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கெடுக்க விடுக்கப்பட்ட வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான தொலைக்காட்சி நேரடி தேர்தல் விவாதங்கள் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்துவது வழமையானது ஒன்று. எனவே இன்றைய விவாதத்தின் பின்னர் கட்சிகளுடைய நிலைப்பாடு மாறுபடலாம் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். 

சரியான, முழுமையான, நம்பகமான செய்திகளை நீங்கள் அறிந்து கொள்ள paristamil.com இணையதளத்தோடு இணைந்திருங்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்