பரிஸ் : காவல்துறையினரின் மோட்டார் சைக்கிளை திருடிய இருவர் கைது!

26 ஆனி 2024 புதன் 07:48 | பார்வைகள் : 9292
காவல்துறையினரின் மோட்டார் சைக்கிளை திருடிய 17 மற்றும் 21 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்று ஒன்றரை மாதங்களின் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய காவல்துறையினரில், மோட்டார் சைக்கிளில் பயணித்து கண்காணிப்பை மேற்கொள்ளும் பிரிவு (moto de la police nationale appartenant au Service de la protection (SDLP) ஒன்று இருப்பது அறிந்ததே. அவர்களுக்குச் சொந்தமான BMW 1250 GS ரக மோட்டார் சைக்கிள் பரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் வைத்து கடந்த மே 1 ஆம் திகதி திருடப்பட்டிருந்தது.
ஏழாம் வட்டாரத்தில் உள்ள சுற்றுச்சூழல் மாற்றம் அமைச்சகத்தின் அலுவலகத்துக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளே திருடப்பட்டிருந்தது.
பின்னர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவல்துறையினர் குற்றவாளிகளை இந்தவாரத்தில் Orly (Val-de-Marne) நகரில் வைத்து கைது செய்துள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1