Paristamil Navigation Paristamil advert login

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்!

26 ஆனி 2024 புதன் 08:12 | பார்வைகள் : 133


ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

உலகக் கோப்பை தொடர் தற்போது வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது.

சூப்பர் 8 சுற்றில் வங்காளதேச அணியிடம் மற்றும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது.

குறித்த தொடரில் அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பையும் இழந்து ஆஸ்திரேலிய அணி வெளியேறியுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அவர் ஆஸ்திரேலியா அணிக்காக 18995 ஓட்டங்களையும் எடுத்துள்ளார். இதில் 49 சதம் அடங்கும்.

மேலும் ஒரு டி20 உலகக் கோப்பை அணியிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணியிலும் வார்னர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்