ஒலிம்பிக் போட்டிகளுக்காக 13,000+ பாதுகாவலர்கள்.. !
26 ஆனி 2024 புதன் 08:22 | பார்வைகள் : 11458
ஒலிம்பிக் போட்டிகளின் போது பணிபுரியும் ஊழியர்கள் சென்ற ஆண்டு மே மாதம் முதல் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதில் தனியார் பாதுகாவலர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவ்வருட ஜனவரியில் இருந்து இதுவரை 13,000 இற்கும் மேற்பட்டவர்கள் அவ்வாறு பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பாதுகாப்பு துறை ( secteur de la sécurité privée) இத்தகவலை இன்று ஜூன் 26 ஆம் திகதி புதன்கிழமை வெளியிட்டுள்ளது. மொத்தமாக 13,721 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வருட மே மாதத்தில் மட்டும் 3,145 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மருத்துவத்துறை, போக்குவரத்து துறை, உணவு, துப்பரவு போன்ற பிரிவுகளில் 8,800 பேர் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான ‘தொழில்முறை அடையாள அட்டைகள்’ வழங்கப்பட்டுள்ளன.
ஜூலை 26 ஆம் திகதி ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாக உள்ள நிலையில், இந்த ஒருமாத காலத்தில் மேலும் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan