காசாவில் பட்டினியில் வாடும் பாலஸ்தீனியர்கள்
26 ஆனி 2024 புதன் 08:52 | பார்வைகள் : 1350
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கை காசா பகுதியில் சுமார் அரை மில்லியன் பாலஸ்தீனியர்கள் பட்டினியால் வாடுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை மேற்கோள்காட்டி, இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் தொடருமானால், இந்நிலை அதிக அபாய நிலையாக மாறும் என சுட்டிக்காட்டியுள்ளன.
ஆனால் மே மாத தொடக்கத்தில் இஸ்ரேல் தரைவழி நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து, ரஃபா எல்லைக் கடக்கும் பாதை மூடப்பட்டது.
ரஃபா நகரில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்ததால் தெற்கு மற்றும் மத்திய காசாவில் உணவு கிடைப்பதை கணிசமாகக் குறைத்துள்ளது.