Paristamil Navigation Paristamil advert login

உலகிலேயே மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரம் இது... மூன்றாமிடத்தில் லண்டன்

உலகிலேயே மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட நகரம் இது... மூன்றாமிடத்தில் லண்டன்

26 ஆனி 2024 புதன் 09:41 | பார்வைகள் : 459


அமெரிக்க நகரமொன்று உலகிலேயே மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதியாக அறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் காத்திருக்கும் நேரத்தால் பல பில்லியன் டோலர் தொகையை மக்கள் இழப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரமே உலகிலேயே மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த நகரம் தெரிவாகியுள்ளது.

சராசரியாக ஒரு சாரதி கடந்த ஆண்டில் நியூயார்க் நகர போக்குவரத்தில் சிக்கி 101 மணி நேரம் தாமதித்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு போக்குவரத்து நெரிசலில் மக்களில் சிக்கிக் கொண்டு தாமதமாவதால், பொருளாதாரத்தில் 9.1 பில்லியன் டொலர் இழப்பை சந்தித்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

போக்குவரத்து நெரிசலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நகரம் மெக்சிகோ சிட்டி, 3 வது லண்டன், நான்காவது பாரிஸ், 5வது இடத்தில் சிகாகோ உள்ளது.

போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்குவதால் 2023ல் 70.4 பில்லியன் டொலர் தொகையை ஒட்டுமொத்தமாக அமெரிக்கா இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

சராசரியாக 42 மணி நேரம் சாரதிகள் போக்குவரத்தில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்