Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் உருகிய ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை

அமெரிக்காவில் உருகிய ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை

26 ஆனி 2024 புதன் 09:55 | பார்வைகள் : 752


அமெரிக்காவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக, அமெரிக்காவின் 16-வது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகியுள்ளது. 

ஆபிரகாமின் 6 அடி உயர மெழுகு சிலையின் தலைபகுதி உருகி கீழே வளைந்துள்ளது. 

இந்த திறந்தவெளி மெழுகு சிலையின் சேதமடைந்த தலைப்பகுதி தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் 16-வது குடியரசு தலைவர் ஆபிரகாம் லிங்கன். 

இவர் அடிமை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 

1860-ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார். 

அவரை பெருமைப்படுத்தும் வகையில் வாஷிங்டனில் தொடக்கப்பள்ளி வளாகத்தில் 6-அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை வடிவகைப்பட்டு இருந்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்