Paristamil Navigation Paristamil advert login

கனடியர்களுக்கு அரசாங்கம்  விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

கனடியர்களுக்கு அரசாங்கம்  விடுத்துள்ள அவசர எச்சரிக்கை

26 ஆனி 2024 புதன் 16:05 | பார்வைகள் : 1850


கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த அவசர எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

லெபனானில் வாழ்ந்து வரும் கனடியர்கள் அந்த நாட்டை விட்டு அவசரமாக வெளியேற வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

லெபனானின் தற்போது நிலவிவரும் பதற்ற நிலைமைகளின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இஸ்ரேல் படையினருக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.


எனவே கனடியர்கள், லெபனானுக்கான பயணங்களை மேற்கொள்வது உசிதமானதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கனடாவில் லெபனானில் தங்கியுள்ள கனடியர்கள் வர்த்தக விமானங்களின் ஊடாக அங்கிருந்து வெளியேறுவது பொருத்தமானது என அறிவித்துள்ளார்.


லெபனானில் ஆயுதப் போராட்டம் வெடித்தால் அங்கு வாழ்ந்து வரும் கனடியர்கள் வெளியேறுவதற்கு சிக்கல்கள் ஏற்படக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே கனடாவை விட்டு லெபனானை விட்டு வெளியேறுமாறு கனடிய பிரஜைகளுக்கு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.


லெபனானுக்கான பயணங்களை மேற்கொள்ளும் போது அரசாங்கத்தின் பயண எச்சரிக்கைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அவர் மேலும் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்