’ஜோர்தன் பாதெல்லாவுடன் எவ்விதபுகைப்படங்களும் எடுக்கமாட்டேன்!’ - ஆன் இதால்கோ தெரிவிப்பு!

27 ஆனி 2024 வியாழன் 05:44 | பார்வைகள் : 5844
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஜோர்தன் பாதெல்லாவின் கட்சி பெரும்பான்மை பெற்றால். அவருடன் எவ்வித புகைப்படங்களையும் எடுக்கமாட்டேன் என பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார்.
சோசலிச கட்சியை சேர்ந்த ஆன் இதால்கோ, Nouveau Front populaire கூட்டணிக்கு ஆதரவாக செயற்பட்டு வருகிறார். இந்நிலையில், தீவிர வலதுசாரியான ஜோர்தான் பாதெல்லாவின் கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றால் அவர் பிரதமராக தேர்தெடுக்கப்பட்டால், அவருடன் நான் இணைந்து செயற்படுவதற்கு எதுவும் இல்லை எனவும், ஒலிம்பிக் மற்றும் பாரா-ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாடுகளில் அவரது பங்கு எதுவும் இல்லை எனவும் ஆன் இதால்கோ தெரிவித்தார்.
நான் இப்போது இரவுபகலாக ஏற்பாடுகளுக்காக உழைத்து வருகிறேன். ஆனால், அதன் உழைப்பை அடுத்தவர் திருடும் முயற்சியை நான் எற்கப்போவதில்லை. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இறுதி நிமிடத்தில் எடுத்த இந்த முடிவு (*பொது தேர்தலுக்கான அறிவிப்பு) கட்சியை கெடுக்கும் செயல் என நான் நினைக்கின்றேன்!” எனவும் ஆன் இதால்கோ தெரிவித்தார்.