தமிழகத்தில் ராணுவ தளவாடம்: ஜனாதிபதி உரையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
27 ஆனி 2024 வியாழன் 07:51 | பார்வைகள் : 1578
பார்லி., கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகையில், ''உத்தரபிரதேசம், தமிழகத்தில் ராணுவ வழித்தடம் அமைக்கப்பட உள்ளதாக'' அறிவித்தார்.
* ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
* பிரதமரின் கிராமப்புற சாலை வசதி திட்டம் கிராமப்புற உள்கட்டமைப்புகளுக்கு ஊக்கம் அளித்துள்ளது.
* பின் தங்கிய பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, பிரதமரின் ஜன் மன் திட்டத்தின் மூலம் ரூ.24,000 கோடி செலவழிக்கப்பட்டு வருகிறது.
* 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்படுகிறது.
புல்லட் ரயில்
* மின்சாரத்தை விற்பனை செய்து வருவாய் பெருக்க, சூரிய ஒளி மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
* சோலார் பேனல் திட்டம், மின்சார கட்டணத்தை குறைக்கும்.
* உலகத்திலேயே மிகப்பெரிய உள்நாட்டு விமான சேவை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.
* மும்பையில் அமைக்கப்படுவதை போல நாட்டின் மற்ற பகுதிகளிலும் புல்லட் ரயில் திட்டம் கொண்டுவர முயற்சி எடுக்கப்படும்.
ராணுவ வழித்தடம்
* உத்தரபிரதேசம், தமிழகத்தில் ராணுவ வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.
* பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி முன்பை காட்டிலும் 18 மடங்கு அதிகரித்துள்ளது.
* 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்த தயார். இதற்கான முயற்சி எடுக்கப்படும்.
வினாத்தாள் கசிவு
* போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசிவதை தடுக்க, கடும் தண்டனை விதிக்கும் வகையில், புதிய சட்டத்தை அரசு இயற்றியுள்ளது.
* வினாத்தாள் கசிவுகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.
* வினாத்தாள் கசிவு பிரச்னைகளை களைய கட்சி, அரசியலை தாண்டி நாம் ஒன்றிணைய வேண்டும்.
* வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
* 50 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 25ல் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதன் மூலம் அரசியல் சாசனத்தின் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்பட்டது.
* வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்புவது ஒவ்வொரு குடிமகனின் லட்சியமும் உறுதியும் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
எதிர்க்கட்சிகள் முழக்கம்
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையின்போது, புதிய மருத்துவக் கல்லூரிகள் பற்றிய அறிவிப்பின்போது, எதிர்க்கட்சியினர் 'நீட்... நீட்...' என முழக்கமிட்டனர். அதேபோல், ராணுவ தளவாடம் உள்ளிட்ட அறிவிப்பின்போது, 'அக்னிவீர்... அக்னிவீர்...' என்றும், வடகிழக்கு மாநிலங்களில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டபோது, 'மணிப்பூர்... மணிப்பூர்...' என கோஷமிட்டனர். இவற்றையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றினார்.