Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் போலி வேலை வாய்ப்பு - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் போலி வேலை வாய்ப்பு - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

29 ஆவணி 2023 செவ்வாய் 10:25 | பார்வைகள் : 7497


கனடாவில் போலி வேலை வாய்ப்பு மோசடிகள் இடம்பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கனேடிய மோசடி தவிர்ப்பு நிலையத்தினால் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சி மோசடி செயற்பாடுகளின் ஓர் அங்கமாக இவ்வாறு போலி வேலை வாய்ப்புகள் வழங்கும் பிரச்சாரங்கள் அதிகரித்து வருகின்றது.

இணைய வழியில் சுயாதீன பணிகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக பிரச்சாரம் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படாத நிலையில் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி இவ்வாறு மோசடி மேற்கொள்ளப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

நட்புறவாக பழகி அதன் மூலமாக பண மோசடி செய்யும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் இவ்வாறான மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கனடிய மோசடி தவிர்ப்பு நிலையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை 32000 மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்