Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு விமானப்படையில் 90 ஆவது நிறைவுக் கொண்டாட்டம்.. சாகச கண்காட்சி!

பிரெஞ்சு விமானப்படையில் 90 ஆவது நிறைவுக் கொண்டாட்டம்.. சாகச கண்காட்சி!

27 ஆனி 2024 வியாழன் 14:00 | பார்வைகள் : 1417


பிரெஞ்சு விமானப்படை ஆரம்பிக்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், சாகசக் கண்காட்சியுடன் அந்த நிகழ்வு நாளை கொண்டாடப்பட உள்ளது. 

வெர்சாய் மாளிகைக்கு (château de Versailles மேலாக இந்த சாகச நிகழ்ச்சி நாளை ஜூன் 28, வெள்ளிக்கிழமை இடம்பெற உள்ளது. பிரெஞ்சு விமானப்படையில் உள்ள அதிநவீன போர் விமானங்களும், ரஃபேல் விமானங்களும், ட்ரோன் விமானங்களும் சாகசத்தில் ஈடுபட உள்ளன.

இந்த நிகழ்வைக் காண அங்கு 20,000 பார்வையாளர்கள் ஒன்று கூடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வின் இன்னொரு பகுதியாக Palais des Congrès  அரங்கில் மாபெரும் சந்திப்பு ஒன்றும் இடம்பெற உள்ளது. அதில் பிரெஞ்சு முன்னாள் போர் விமான விமானிகள் கலந்துகொண்டு கெளரவிக்கப்பட உள்ளதாகவும் அறிய முடிகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்