பிரான்சில் இறைச்சி உண்ணும் பழக்கம் கணிசமாக வீழ்ச்சி..!!
27 ஆனி 2024 வியாழன் 14:48 | பார்வைகள் : 2879
பிரான்சில் இறைச்சி உண்ணும் பழக்கம் கடந்த 20 ஆண்டுகளில் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டில் நபர் ஒருவர் ஆண்டுக்கு 26.3 கிலோ இறைச்சி உண்டுகொண்டிருந்த நிலையில், தற்போது ஆண்டுக்கு 21.3 கிலோ இறைச்சி உண்ணுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 5.8% சதவீதமாக குறைந்துள்ளது.
இறைச்சியின் விலை அதிகரிப்பு ஒரு மிக முக்கியமான காரணம் எனவும், பிரான்சில் வாங்கும் திறன் குறைவடைந்துள்ளதாகவும், வாடகை, எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், அதன் காரணமாக இறைச்சி வாங்கும் வீதம் குறைவடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.