Paristamil Navigation Paristamil advert login

தெறிக்கவிடும் அஜித்தின் 'குட் பேட் அக்லி' செகண்ட் லுக்!

தெறிக்கவிடும் அஜித்தின் 'குட் பேட் அக்லி' செகண்ட் லுக்!

27 ஆனி 2024 வியாழன் 14:53 | பார்வைகள் : 274


அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ’குட் பேட் அக்லி’ என்ற படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மாலை 6.40 மணிக்கு இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் அட்டகாசமான போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’God Bless You மாமே’ என்ற வாசகங்களுடன் வெளியாகி உள்ள இந்த போஸ்டரில் அஜித் செம குத்து பாட்டுக்கு நடனம் ஆடி உள்ளார் என்று தெரிகிறது. மேலும் இந்த போஸ்டரில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் 2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாவது உறுதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்