'Paris-Berlin' இரவுநேர தொடரூந்து சேவைகள் நிறுத்தப்படும் "பாதுகாப்பு இல்லை".
27 ஆனி 2024 வியாழன் 16:12 | பார்வைகள் : 3310
முன்பு நடைமுறையில் இருந்து பின்னர் நவீன TGV போன்ற தொடரூந்து சேவைகள் நடைமுறைக்கு வந்ததால் வழக்கொழிந்து போன பல இரவுநேர தொடரூந்து சேவைகளில் ஒன்றான பிரான்சையும் ஜெர்மனியை யும் இணைக்கும் Paris-Berlin சேவைகள் கடந்த 2023 மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த இருவழி (Paris-Berlin, Berlin-Paris ) தொடரூந்து சேவைகளே வரும் ஓகஸ்ட் 12ம் திகதி முதல் வழிகளின் பாதுகாப்பு இன்மையால் நிறுத்தப்பட்டுள்ளது என SNCF அறிவித்துள்ளது. "கோடைக்கால விடுமுறை முடிவதற்கு முன்னரே குறித்த சேவைகள் நிறுத்தப்படுவது பயணிகளை பெரிதும் பாதிக்காதா?" என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த SNCF "இல்லை குறித்த காலகட்டத்தில் எந்த விதமான முன் பதிவுகளும் செய்யப்பட்டவில்லை" என தெரியவந்துள்ளது.
சேவைகள் மீண்டும் ஆரம்பித்ததில் இருந்து செய்யப்பட்டு வந்த முறைப்பாடுகளை சீர் செய்யவே ஓகஸ்ட் 12ம் திகதி முதல் 28 ஓகஸ்ட் வரை சேவைகளை நிறுத்தி திருத்த வேலைகளை தாம் மேற்கொள்ளதாகவும் ஓகஸ்ட் 28ம் திகதிக்குப் பின்னர் மீண்டும் சேவைகள் இடம்பெறும் எனவும் SNCF நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.