7 முறை சுழன்று கவிழ்ந்த Tesla Y Model., உயிர் தப்பிய மூவர்., எலோன் மஸ்க் பதிவு
28 ஆனி 2024 வெள்ளி 08:11 | பார்வைகள் : 1500
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் டெஸ்லா (Tesla) கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது கார் 7 முறை கவிழ்ந்த போதிலும், சாரதி உட்பட 3 பேருக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.
கார் கவிழ்ந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. காரின் இருந்த பெண் சாரதியும், காரில் இருந்த மற்ற நபரும் போன் செய்து உதவி கேட்பதை வெளியான அந்தக் காணொளியில் காணமுடிகிறது.
சாரதி மிக அதிக வேகத்தில் காரை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காரின் வேகம் மணிக்கு 161 கிமீ வேகத்தில் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
கார் கவிழ்ந்த போது 6 வாகனங்கள் மீது மோதியது. இதன் காரணமாக மற்றொரு காரும் கவிழ்ந்தது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த முதல் நபர் பெண் டிரைவரை வெளியே இழுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். எனினும் அந்த பெண்ணுக்கு பாரிய காயம் எதுவும் ஏற்படவில்லை.
இது தொடர்பாக பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
டெஸ்லா உரிமையாளர் எலோன் மஸ்க், விபத்தின்பொது எடுக்கப்பட்ட காணொளியை மீண்டும் பகிர்ந்து, 'மக்கள் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை' என்று பதிவிட்டுள்ளார்.
இந்த விபத்துக்குப் பிறகு, டெஸ்லா காரின் பாதுகாப்பு அம்சங்களை சமூக ஊடகங்களில் மக்கள் பாராட்டி வருகின்றனர்.