Paristamil Navigation Paristamil advert login

Arc de Triomphe இல் அமைக்கப்பட்ட பரா-ஒலிம்பிக் இலட்சணை..!

Arc de Triomphe இல் அமைக்கப்பட்ட பரா-ஒலிம்பிக் இலட்சணை..!

28 ஆனி 2024 வெள்ளி 08:38 | பார்வைகள் : 850


ஒலிம்பிக் போட்டிகளோடு மாற்றுத்திறனாளிகளுக்காக பரா-ஒலிம்பிக் போட்டிகள் நடாத்தப்படுகிறமை அறிந்ததே. ஈஃபிள் கோபுரத்தில் ஒலிம்பிக் வளையங்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது Arc de Triomphe கட்டிடத்தில் பரா-ஒலிம்பிக் போட்டிகளுக்காக இலட்சணை அமைக்கப்பட்டுள்ளது.

இன்று ஜூன் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை அவை அங்கு பொருத்தப்பட்டன. 'சிவப்பு, நீலம், பச்சை' எனும் மூவர்ணங்களை இந்த இலட்சணை கொண்டுள்ளது. இந்த 2024 ஆம் ஆண்டுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக இலட்சணை இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில், பரா-ஒலிம்பிக் போட்டிகள் ஓகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகின்றன. சரியாக இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் இந்த இலட்சணை அங்கு பொருத்தப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் குழுவின் தலைவர் Tony Estanguet தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்