Paristamil Navigation Paristamil advert login

  ஸ்லோவாக்கியாவில் தொடருந்துடன் பேருந்து மோதி விபத்து - 6 பேர் பலி

  ஸ்லோவாக்கியாவில் தொடருந்துடன் பேருந்து மோதி விபத்து - 6 பேர் பலி

28 ஆனி 2024 வெள்ளி 09:34 | பார்வைகள் : 443


ஸ்லோவாக்கியாவில் (Slovakia) தொடருந்து ஒன்றுடன் பேருந்து மோதி விபத்திற்குள்ளது.

குறித்த விபத்தில்  6 பேர் உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் பிரட்டிஸ்லாவாவிலிருந்து (Bratislava) 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நோவ் சாம்கி (Nove Zamky) நகரில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் பேருந்தில் 9 பேரும், தொடருந்தில் 200 பேர் வரையிலும் பயணித்துள்ளனர்.

அதேநேரம் உயிரிழந்தவர்கள் அனைவரும் பேருந்தில் பயணித்தவர்கள் என கூறப்படுகின்றது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்