'மக்ரோன் பிரெஞ்சு அரசியலமைப்பை படிக்கவேண்டும்..!' - மரீன் லு பென் விளாசல்..!
28 ஆனி 2024 வெள்ளி 14:20 | பார்வைகள் : 3982
பிரெஞ்சு அரசியலமைப்பு சாசனத்தை இம்மானுவல் மக்ரோன் நன்கு படிக்கவேண்டும் என மரீன் லு பென் காரசாரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
நாளை மறுநாள் முதலாம் கட்ட வாக்கெடுப்பு பிரான்ஸ் தயாராகி வரும் நிலையில், இன்று ஜூன் 28, வெள்ளிக்கிழமை மரீன் லு பென் வழங்கிய பேட்டி ஒன்றின் போது அவர் இந்த கருத்தினை வெளியிட்டார். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் 'உக்ரேனுக்கு தரைப்படைகளை அனுப்ப வேண்டிய சூழல் வரலாம்!' என தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறார்.
ஆனால் தற்போது நடைபெற உள்ள தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான RN இற்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்து, அதன் பிரதான வேட்பாளர் ஜோர்தன் பார்தெல்லா பிரதமராக வருவார் என தெரிவிக்கப்படுகிறது. ”உக்ரேனுக்கு இராணுவ வீரர்களை அனுப்ப மாட்டேன்!’ என ஜோர்தன் பார்தெல்லா கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து ஜனாதிபதி தரப்பை கோபமூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தினரை அனுப்புவது அல்லது அனுப்பாமல் விடுவது தொடர்பில் பிரதமர் முடிவுகளை எட்டலாம். இதனை பிரெஞ்சு அரசியலமைக்கு அனுமதிக்கிறது. அது மக்ரோனுக்கு தெரியவில்லை. எனவே அவர் அரசியலமைப்பை நன்கு படிக்கவேண்டும்!’ என தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ‘இராணுவ தளபதி’ என்பது கெளரவத்துக்குரிய பதவி எனவும், முடிவுகளை பிரதமரே எடுப்பார் எனவும் மரீன் லு பென் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முதலாம் கட்ட வாக்கெடுப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ள நிலையில், இப்பொதுழுதே ‘பிரதமர்-ஜனாதிபதி’ முரன்பாடுகள் எழுந்துள்ளமை நகைப்புக்குரியது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.