முதலிரவில் பால் குடிக்குறாங்களே அது எதுக்குனு தெரியுமா?
28 ஆனி 2024 வெள்ளி 14:30 | பார்வைகள் : 1648
திருமணத்தை முன்னிட்டு செய்யப்படும் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் சுவாரசியமான காரணங்கள் இருக்கும்அந்த வகையில் முதலிரவில் தம்பதிகளுக்கு பால் அருந்த கொடுப்பதற்கும் முக்கியமான காரணம் உண்டு. குங்குமப்பூ, பாதாம் போன்றவை பாலில் கலந்து கொடுப்பார்கள். இது இந்து மரபில் வழக்கமாகவே உள்ளது. இது குறித்து காம சூத்ராவில் விளக்கப்பட்டுள்ளது.
காதல், காமம், உறவு ஆகியவை குறித்து புரிந்து கொள்ள காமசூத்ரா உதவும். இதில் பாலியல் உறவை மேம்படுத்த பல பொசிஷன்கள், அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கும். அந்த வகையில் முதலிரவில் பால் அருந்த காரணம் தம்பதிக்கு சகிப்புத்தன்மை வர எனக் கூறப்படுகிறது. உங்களுக்கு தெரியுமா..?
நீங்கள் கருஞ்சீரகச் சாறு, கொஞ்சம் தேன், நாட்டு சர்க்கரை, மஞ்சள் ஒரு சிட்டிகை, சிறிதளவு மிளகு தூள் ஆகியவை பாலில் போட்டு அருந்தினால் முதலிரவு படுசுவாரசியமாக மாறிவிடும்.
காமசூத்ரா அப்படி கூறினாலும் பண்டைய இந்திய நூல்கள் கொஞ்சம் வேறுவிதமாக கூறுகிறது. புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதி முதலிரவில் பால் குடிப்பது உடலில் புரதச்சத்தை மேம்பாடு அடையதானாம். இதனால் அவர்களுக்கு ஆற்றல் அதிகம் கிடைக்கும். திருமணம் அன்று மணமக்கள் மிகவும் களைப்பாக இருப்பார்கள். அவர்களை புத்துணர்வாக்க, ஆற்றலைப் பெருக்க முதலிரவில் பால் குடிக்க ஏற்பாடு செய்கிறார்கள் பெரியோர்.
இப்படி பாதாம், குங்குமப்பூ கலந்து அவர்கள் பால் அருந்துவதால் இருவருக்கும் பாலுணர்வு தூண்டப்படும். உடலுறவு ஆசையையும் கிளர்ச்சியையும் கொடுக்கும். ஆண்கள் அந்த பால் அருந்தும்போது உயிர்ச்சக்தி கிடைக்குமாம். முதலிரவில் இருவரும் மாறிமாறி பால் அருந்துவதால் அவர்களுடைய பதற்றம் கொஞ்சமாக குறையும்.
குறிப்பாக அவர்களின் உடலில் உள்ள செரோடோனின் ஹார்மோன் நன்கு சுரக்கும். இது ஒரு மகிழ்ச்சி ஹார்மோன். இதனால் அவர்களின் மனநிலை மேம்படும். இதனால் தான் காலங்காலமாக முதலிரவில் பால் குடிப்பது பழக்கமாகியுள்ளது.