Paristamil Navigation Paristamil advert login

நெல்லிக்காய் ஊறுகாய்

நெல்லிக்காய் ஊறுகாய்

28 ஆனி 2024 வெள்ளி 14:37 | பார்வைகள் : 147


ஊறுகாய் விரும்பாதவர்கள் நம்மில் யாரும் இருக்க வாய்ப்பில்லை. ஊறுகாய் சாப்பிட வேண்டியே உணவு உண்பவர்களும் நம்மில் பலர் உள்ளனர். பல வகையான பொருட்களிலும் ஊறுகாய் செய்து சாப்பிடலாம். வைட்டமின் C, கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, புரதம் போன்ற பல சத்துக்கள் நெல்லிக்காயில் உள்ளன. நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுவது இந்த நெல்லிக்காய்.

தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய் கால் கிலோ

மஞ்சள் பொடி கால் ஸ்பூன்

1 ஸ்பூன் கடுகு

1 ஸ்பூன் வெந்தயம்

2 ஸ்பூன் நல்லெண்ணை

1 ஸ்பூன் மிளகாய் பொடி

உப்பு

காயப் பொடி


செய்முறை : 

நெல்லிக்காய்யை, தண்ணீர் சேர்த்து, மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து நெல்லிக்காயை உதிர்த்து, விதைகளை நீக்கவும். ஒரு பாத்திரத்தில் கடுகு, வெந்தயம் சேர்த்து வறுக்க வேண்டும். தொடர்ந்து அவற்றை பொடித்துகொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணைய் சேர்த்து அதில், நெல்லிக்காய் உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து மஞ்சள்பொடி, மிளகாய் பொடி சேர்த்து கிளரிய பின்னர் காயப் பொடி, கடுகு- வெந்தயம், அரைத்த பொடி ஆகியவற்றை சேர்த்து கிளரினால் சூப்பரான நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.

வர்த்தக‌ விளம்பரங்கள்