Paristamil Navigation Paristamil advert login

€4,000 யூரோக்களுக்கு விற்பனைக்கு வருகிறது Apple Vision Pro..!!

€4,000 யூரோக்களுக்கு விற்பனைக்கு வருகிறது Apple Vision Pro..!!

28 ஆனி 2024 வெள்ளி 14:58 | பார்வைகள் : 1907


அப்பிள் நிறுவனத்தின் Vision Pro சாதனம் பிரான்சில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி பலரால் கலவையான விமர்சனங்களுக்கு உள்ளான இந்த சாதனம், தற்போது பிரான்சில் €4,000 யூரோக்களுக்கு முன்பதிவு செய்யப்படுகிறது. 

முப்பரிமான அனுபவத்தை தரும் இந்த சாதனம், கண்களின் முன்னே மிகப்பெரிய திரையுடன் கூடிய திரைப்பட அனுபவத்தையும், விளையாட்டுக்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த முப்பரிமான அனுபவத்தையும் தருகிறது இது.

சந்தையில் இதேபோன்ற கருவிகள் €300 யூரோக்காளில் இருந்து விற்பனையில் உள்ள போதும், இந்த அப்பிள் நிறுவனத்தின் Vision Pro, புதுவித அனுபவத்தை தருகிறது.

இன்று ஜூன் 28, வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இதற்கான முன்பதிவுகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. அப்பிள் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமூடாக முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்