Paristamil Navigation Paristamil advert login

■ இடியுடன் கூடிய பலத்த மழை.. 25 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

■ இடியுடன் கூடிய பலத்த மழை.. 25 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

28 ஆனி 2024 வெள்ளி 16:13 | பார்வைகள் : 1337


நாளை, ஜூன் 29 சனிக்கிழமை நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பதிவாகும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

கிழக்கு, மத்திய மற்றும் தென்மேற்கு பகுதிகளைச் சேர்ந்த 25 மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' நிறத்தில் எச்சரிக்கை வகைப்படுத்தப்பட்டுள்ளது. 50 தொடக்கம் 80 மில்லிமீற்றர் வரையான மழை பதிவாகும் எனவும், நாளை நண்பகல் ஆரம்பிக்கும் இந்த மழை, நள்ளிரவு கடந்தும் பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சில இடங்களில் மணிக்கு 100 கி.மீ வேகம் வரை புயல் வீசும் எனவும், ஆலங்கட்டி மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்