Canal Saint-Denis : இரண்டு தரைப்பாலங்கள் அமைப்பு!
.jpg)
28 ஆனி 2024 வெள்ளி 19:00 | பார்வைகள் : 5503
Canal Saint-Denis கால்வாய் மீது நடைபயணிகளுக்காக இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை ஜூன் 29, சனிக்கிழமை அவை திறந்துவைக்கப்பட உள்ளன.
Saint-Denis நகரில் ஒன்றும் Aubervilliers நகரில் இந்த தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை பாதசாரிகள் மற்றும் மிதிவண்டிகளில் பயணிப்பவர்கள் மாத்திரமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளை கருத்தில் கொண்டு இந்த தரைப்பாலங்கள் திறக்கப்பட்ட உள்ளன. போட்டிகள் ஆரம்பமவதற்கு முன்னர் மேலும் நான்கு பாலங்கள் இதுபோல் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.