தீவிரமடையும் கக்குவான் நோய்... சிறுவர்கள் உள்ளிட்ட 17 பலி..!
28 ஆனி 2024 வெள்ளி 20:00 | பார்வைகள் : 4060
’La coqueluche’ என அறியப்படும் மிக மோசமான வறட்டு இருமல், சுவாசப்பிரச்சனை மற்றும் வாந்தி போன்ற தாக்கங்களை கொண்ட கக்குவான் இருமல் பிரான்சில் தீவிரமடைந்துள்ளது. இவ்வருட ஆரம்பம் முதல் இதுவரை சிறுவர்கள் உள்ளிட்ட17 பேர் பலியாகியுள்ளனர்.
பலியானவர்களில் 14 சிறுவர்கள் எனவும், மூவர் வயதுவந்தோர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பக்டீரியா மிக மோசமாக பரவி வருவதாகவும், குறிப்பாக கடந்த இரு வாரங்களில் இந்த பரவல் மிகவும் வேகமெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
”2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாடு முழுவதும் சுழற்சியாக இந்த தொற்று பரவியது. கடந்த சில வாரங்களில் இந்த பரவல் அதிகரித்துள்ளது!’ என சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.