■ மீண்டெழுந்த பணவீக்கம்..!!

29 ஆனி 2024 சனி 07:00 | பார்வைகள் : 7630
பிரான்சில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்து, பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
L'indice des prix à la consommation அல்லது (GDP என உலக நாடுகளில் குறிப்பிடப்படும்..) இந்த நுகர்வோர் விலைக் குறியீடை வைத்தே இந்த பணவீக்கம் கணக்கிடப்படுகிறது. பணவீக்கம் குறைந்தால் மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்புக்கு உள்ளாகும். நாட்டின் பொருளாதாரமும் சீரடையும்.
இந்நிலையில், மே மாதத்தில் 2.3 புள்ளிகளாக இருந்த பணவீக்கம், ஜூன் மாதத்தில் 2.1 புள்ளிகளாக குறைவடைந்துள்ளது. இதனை INSEE நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு, பிரெஞ்சு மக்களின் வாங்கும் திறன் சென்ற மாதத்தோடு ஒப்பிடுகையில் 1.5% சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப்பொருட்களின் விலை, எரிபொருட்களின் விலை மிகச் சிறிய அளவில் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதேவேளை, எரிவாயு, சிகரெட், மதுபானங்களின் விலை சிறிய அளவில் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1