Paristamil Navigation Paristamil advert login

இன்று இத்தாலியில் இருந்து பல மாற்றங்களுடன் 'Tour de France 2024' துவிச்சக்கர வண்டி பந்தயம்

இன்று இத்தாலியில் இருந்து பல மாற்றங்களுடன் 'Tour de France 2024' துவிச்சக்கர வண்டி பந்தயம்

29 ஆனி 2024 சனி 09:16 | பார்வைகள் : 3417


1903ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'Tour de  France' என அழைக்கப்படும் ஐரோப்பாவில் நடத்தப்பெறும் துவிச்சக்கர வண்டி போட்டிப் பந்தயங்களில் மிகவும் புகழ்பெற்றதும், கூடுதலான பரிசுத்தொகைகளைக் கொண்டதுமான இந்த பந்தய இவ்வாண்டு முதல்முறையாக இத்தாலியில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. ஏற்கனவே குறித்த போட்டிகள் 26 நாடுகளில் இருந்து ஆரம்பித்த வரலாற்றைக் கொண்டது.

இன்று 29/06 சனிக்கிழமை 111வது தடவையாக ஆரம்பித்துள்ள போட்டிகள் எதிர்வரும் ஜுலை 21ம் திகதி முடிவடையவுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக பிரான்ஸ் தேசத்தின், தலைநகரின் சிறப்பு சின்னமான Tour Eiffel பகுதியில் கோலாகலம் முடிவடைந்தது வந்த 'Tour de France' இவ்வாண்டு Nice நகரில் நிறைவடைந்துள்ளது. தலைநகரம் பாரிஸ் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகி வருவதினால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

21 பகுதிகளாக இரண்டு நாட்கள் ஓய்வுடன் 3500 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் இந்த போட்டி பந்தயத்தில் ஒவ்வொரு நாளின் நிறைவிலும் முதலில் வந்தவருக்கு மஞ்சள் சட்டையும், மிக விரைவாக செலுத்தியவருக்கு பச்சை சட்டையும், மலைப்பகுதிகளில் மிக சிறந்த முறையில் செலுத்தியவருக்கு
போல்கா புள்ளிகள் இட்ட சட்டையும் வழங்கப்படுகின்றன. 25 அகவைக்கு குறைவான சிறந்த இளம் வீரருக்கு வெள்ளை சட்டை வழங்கப்படுகிறது. Parisன் நிறைவுப் பகுதியை மிகக் குறைந்த நேரத்தில் எட்டுபவர் போட்டியை வென்றவராக அறிவிக்கப்படுவார்,
ஆனால் இவ்வாண்டு Niceன் நிறைவுப் பகுதியை மிகக் குறைந்த நேரத்தில் எட்டுபவர் போட்டியை வென்றவராக அறிவிக்கப்படவுள்ளார். ஒவ்வொரு நாளும் முன்னிலை பெறும் வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்