Paristamil Navigation Paristamil advert login

சீனா நாட்டிற்கு செல்ல வேண்டாம் மக்களை எச்சரிக்கும் தாய்வான்

சீனா நாட்டிற்கு செல்ல வேண்டாம் மக்களை எச்சரிக்கும் தாய்வான்

29 ஆனி 2024 சனி 10:31 | பார்வைகள் : 2137


தனது குடிமக்களை சீனா, ஹாங்காங்கிற்கு செல்ல வேண்டாம் என தைவான் எச்சரித்துள்ளது. 

சீனாவில் இருந்து பிரிந்த தைவான் 1949யில் தனி நாடானது. 

ஆனாலும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா முயன்று வருகிறது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

 மேலும், தைவானுடன் எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் தைவான் தனது நாட்டின் குடிமக்களை சீனாவிற்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது. 

ஹாங்காங், மக்காவோவின் அரை தன்னாட்சி சீனப் பகுதிகளுக்கும் செல்வதைத் தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளது. 

செய்தியாளர் சந்திப்பில் Mainland விவகார கவுன்சிலின் செய்தித் தொடர்பாளரும், துணைத் தலைவருமான லியாங் வென்-சீ அறிக்கையை வெளியிட்டார்.

தைவான் தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக இணைக்கப்படும் என சீனா அச்சுறுத்திய நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

நூறாயிரக்கணக்கான தைவானியர்கள் சீனாவில் வாழ்கின்றனர். 

ஒவ்வொரு ஆண்டும் வணிகம், சுற்றுலா அல்லது குடும்ப வருகைக்காக பயணம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்