பல ஆண்டுகளுக்கு பின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா
29 ஆனி 2024 சனி 12:00 | பார்வைகள் : 4960
நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கிறார். பொது விழாக்களில் பெரும்பாலும் கலந்து கொள்ள மாட்டார். தன் பட விழாக்களுக்கே மிகவும் அரிதாக தான் வருவார். இந்தநிலையில் விஷ்ணுவர்தன் தற்போது இயக்கி வரும் 'நேசிப்பாயா' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டார்.
விழாவில் அவர் பேசும்போது “நேசிப்பாயா படத்தின் மூலம் அறிமுகமாகும் ஆகாஷ் முரளிக்கு எனது வாழ்த்துக்கள். நான் எந்த விழாவுக்கும் செல்வதில்லை. ஆனால் இந்த விழா எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நானும் விஷ்ணுவர்த்தனும் இணைந்து பணியாற்றி பத்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது. என்றாலும் நாங்கள் ஒரே குடும்பமாக பழகி வருகிறோம். விஷ்ணுவர்த்தன் பெரிய திறமைசாலி, மனிதாபிமானி. ரொம்ப நாளைக்கு பிறகு வரும் நல்லதொரு காதல் படமாக இது இருக்கும் என்று நம்புகிறேன். ஆகாஷ் முரளி, தயாரிப்பாளர் சினேகா ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்”என்றார்.
'நேசிப்பாயா' படத்தில் முரளி மகன் ஆகாஷ் முரளி அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். ஆகாஷின் மாமனார் பிரிட்டோ படத்தை தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
அஜித் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான 'பில்லா' படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கினார். இந்த படத்தின் மூலம் தான் நயன்தாராவுக்கு கமர்ஷியல் ஹீரோயின் இமேஜ் கிடைத்தது. அந்த நன்றி கடனுக்காக நயன்தாரா இந்த விழாவில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan