கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல்

29 ஆனி 2024 சனி 14:47 | பார்வைகள் : 7727
மதுபானக் கொள்கை முறைகேடு குறித்த வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை ஜூலை 12 வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் ஜாமின் கேட்டு, டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரை சிபிஐ அதிகாரிகளும் கைது செய்தனர்.
அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணைக்கு கெஜ்ரிவால் ஒத்துழைப்பு வழங்கவில்லை. கேள்விகளுக்கு நேரடியாகவும், முறையாகவும் பதில் அளிக்கவில்லை எனக்குற்றம் சாட்டி இருந்தது.
இந்நிலையில், கெஜ்ரிவாலை ஜூலை 12 வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1