2022 ஆம் ஆண்டை விட நான்கு மடங்கு ‘மாற்று வாக்காளர்கள்!
30 ஆனி 2024 ஞாயிறு 01:27 | பார்வைகள் : 3504
‘மாற்று வாக்காளர்கள்’ என்பது, நேரடியாக வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாதவர்கள், தங்களுக்கு பதிலாக பிறிதொருவரை வாக்குச் செலுத்த அனுமதித்தல் ஆகும்.
procurations என குறிப்பிடப்படும் இந்த மாற்று வாக்காளர்கள், சென்ற 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை விட நான்கு மடங்கு அதிகமாக பதிவு செய்துள்ளனர். நேற்று மாலை நிலவரப்படி 2.6 மில்லியனுக்கும் அதிகமானோர் (2,641,852) இவ்வாறு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தேர்தலில் கட்டாயம் வாக்களிக்கும் முடிவினை மக்கள் எடுத்துள்ளது கண்ணூடாகத்தெரிகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஜூன் 30 ஞாயிற்றுக்கிழமை முதலாம் கட்ட தேர்தலும், ஜூலை 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்ட தேர்தலும் இடம்பெற உள்ளது.