யாழில். வன்முறைக்கு தயாரான கும்பல் - ஆயுதங்களுடன் சுற்றிவளைப்பு

29 ஆனி 2024 சனி 16:41 | பார்வைகள் : 4948
யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவம் ஒன்றுக்கு தயாரான வன்முறை கும்பல் ஒன்றினை ஆயுதங்களுடன் கோப்பாய் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.
கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மூவர் அடங்கிய கும்பல் ஒன்று நடமாடுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மூவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர்கள் எனவும் , அவர்களிடம் இருந்து மூன்று வாள்கள் மற்றும் இரண்டு கைக்கோடாரிகள் என்பவற்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் , இவர்களுடன் தொடர்பில் இருக்கும் ஏனையவர்களை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1