Paristamil Navigation Paristamil advert login

■ தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கம்... இன்று தேர்தல்! - நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை..!!

■ தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கம்... இன்று தேர்தல்! - நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவை..!!

30 ஆனி 2024 ஞாயிறு 07:29 | பார்வைகள் : 2978


இன்று ஜூன் 30 ஆம் திகதி பிரான்சில் பொதுத் தேர்தல் இடம்பெற உள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்னர் ‘பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக’ ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்து, பொதுத் தேர்தல் ஒன்றுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். 

577 தொகுதிகளுக்கான முதலாம் கட்ட வாக்கெடுப்பு இன்று நாடு முழுவதும் இடம்பெற உள்ளது. காலை 8 மணிக்கு திறக்கப்படும் வாக்குச்சாவடிகள் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். சில நெருக்கமான நகரங்களில் இரவு 9 மணிவரை திறக்கப்பட்டிருக்கும். 

இம்முறை தேர்தலில் மொத்தமாக 49 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்புடையவர்களாக இருக்கின்றனர்.

முதல் எப்போதும் இல்லாத அளவில், இம்முறை 2.6 மில்லியன் ‘மாற்று வாக்காளர்கள்’ (ஒருவருக்கு பதிலாக இன்னொருவரை வாக்களிக்க அனுமதித்தல்) பதிவு செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, இம்முறைத் தேர்தலில் தீவிர வலதுசாரிகள் பெரும் ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகளில் வலதுசாரிகளே பெரும்பான்மை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக கட்சியின் பிரதான வேட்பாளர் ஜோர்தல் பாதெல்லா பிரதமராக வருவார் எனவும் “கருத்துக் கணிப்பில்” தெரிவிக்கப்படுகிறது

வர்த்தக‌ விளம்பரங்கள்