Paristamil Navigation Paristamil advert login

யாழில் 4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை

யாழில் 4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை

30 ஆவணி 2023 புதன் 05:43 | பார்வைகள் : 9056


மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் பாரிய கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று அதிகாலை வீட்டினை உடைத்து உட்புகுந்த கொள்ளை கும்பல், குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து 11 பவுண் நகை, 3 தொலைபேசி, 2 இலட்சம் ரூபாய் காசு, ஒரு மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக மானிப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.

சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில்  கணவன், மனைவி, இரு சிறுபிள்ளைகள் இருந்த நிலையில் வீட்டின் கதவினை உடைத்து முகமூடி அணிந்து உட்புகுந்து  கொள்ளையடித்து.

பின்னர் பொலிஸாருக்கு அறிவித்தால் பின் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என தெரிவித்து வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனத்தில் நால்வரும் தப்பி சென்றுள்ளனர்.

இதனையடுத்து இது மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்