Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க அதிபர் வேட்பாளராக மிச்செல் ஒபாமா...!

அமெரிக்க அதிபர் வேட்பாளராக மிச்செல் ஒபாமா...!

30 ஆனி 2024 ஞாயிறு 07:13 | பார்வைகள் : 661


அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பைடனுக்கு பதில் அதிபர் வேட்பாளராக ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.

ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். 

அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம்.

அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

மொத்தம் 90 நிமிடம் விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. 

ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்ற நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர்.

81 வயதாகும் ஜோ பபைடன் வயது மூப்பின் காரணமாக சமீப காலங்களாக பொது நிகழ்ச்சிகளில் அவரது பேச்சிலும் நடையிலும் தடுமாற்றம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.

இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவின. 

இந்நிலையில் டிரம்புடன் நடந்த விவாதத்தின்போது, கோவிட் பெருந்தொற்று குறித்து பேசுகையில், ஜோ பைடன் சற்று நேரம் அசைவின்றி ஸ்தம்பித்தார்.

விவாதத்த்திலும் ஜோ பைடன் பேச்சில் பலமுறை தடுமாற்றம் ஏற்பட்டது. அவரது குரல் தழுதழுத்திருநத்து. 

சில சமயம் அவர் என்ன பேசுகிறார் என்றே புரியாத சூழல் நிலவியது.

ஜோ பைடனின் இந்த தடுமாற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பைடனுக்கு பதில் அதிபர் வேட்பாளராக ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக மிச்செல் ஒபாமா போட்டியிடுவார் என்று குடியரசு கட்சியின் வழங்கறிஞர் டெட் க்ரூஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்