பிரான்சில் முதலாவது ‘முயல்’ பூங்கா..!
30 ஆனி 2024 ஞாயிறு 07:21 | பார்வைகள் : 2929
முயல்களுக்கு என பிரத்யேகமான பூங்கா ஒன்று பிரான்சில் முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் வடக்கு நகரமான Rouen இல் அமைக்கப்பட்டுள்ள இந்த முயற்பூங்கா வருகிற ஜூலை 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட உள்ளது. பல்வேறு இன முயல்களோடு, மேலும் சில கொறித்துண்ணிகளும், கினியா பன்றி என அழைக்கப்படும் ஒருவகை உருண்டையான விலங்குகளும் அங்கு காண முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
70 சதுரமீற்றர் பரப்பளவில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளதுடன், மாற்றுத்திறனாளிகள் பார்வையிடுவதற்குரிய பாதை ஒழுங்குகளும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பூங்காவுக்கு செல்பவர்கள், உங்களது வளர்ப்பு நாயினை அழைத்துச் செல்ல முடியாது எனவும், அங்கு சந்திப்புக்கள், உரையாடல்களுக்கான அரங்கு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.