அரசதலைவருக்கு சாதகமான நாடாளுமன்ற ஆட்சி அமையாவிட்டால்,மீண்டும் கலைக்கப்படுமா?
30 ஆனி 2024 ஞாயிறு 07:42 | பார்வைகள் : 9509
பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் 577 ஆசனங்களுக்கான தேர்தல் இன்று முதல் கட்டமாக நடைபெற்று வருகிறது, இதன் பின்னர் வரும் ஞாயிற்றுக்கிழமை 07/07 இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதில் தனியாகவோ அல்லது கூட்டாகவோ 289 ஆசனங்களுக்கு அதிகமான ஆசனங்களை பெறும் கட்சி மிக சுலபமாக ஆட்சியமைக்கும்.
இதில் இவ்வாண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பாலும் அரசதலைவர் Emmanuel Macron அவர்களின் 'Majorité présidentielle' அல்லது 'Renaissance' கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருக்கும் நிலையில், அரசதலைவருக்கு சாதகமான நாடாளுமன்ற ஆட்சி அமையாவிட்டால்,மீண்டும் கலைக்கப்படுமா? எனும் கேள்வி எழுந்துள்ளது.
அரசமைப்பின் சட்டத்தின் படி அடுத்த ஒருவருட காலப்பகுதிக்குள் அரசதலைவர் அமையப் போகும் நாடாளுமன்றம் கலைக்க முடியாது, காத்திருக்க வேண்டும், இல்லையேல் அதற்கு முன்னர் எனில் அரச தலைவர் பிரதமரோடும் கலந்துரையாட வேண்டும்,
பிரான்சில் 1958ம் ஆண்டு ஐந்தாவது குடியரசு நிறுவப்பட்டது, அன்றில் இருந்து மூன்று தடவைகள் நாட்டின் அரசதலைவரும், பிரதமரும் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டிய சந்தர்ப்பம் ஏற்கெனவே ஏற்பட்டிருந்திருக்கிறது.
உதாரணம் 1997ம் ஆண்டு இதேபோல் அன்றைய அரசு தலைவர் Jacques Chirac (LR) அவர்களின் இரண்டாம் கட்ட ஆட்சியின் போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சோசலிஸ்ட் (PS) தலைமையிலான கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று சோசலிஸ்ட்( PS) தலைவர் Lionel Jospin அவர்கள் பிரதமராக ஆட்சி செய்தார் அப்போதுதான் வாரத்துக்கு '35 மணி நேர வேலை' என்கின்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan